SEARCH10P8SW

Search in TSCTIMES fonts for Tamil

Pandiya Raja Collections of Sankam Tamil literature Search Program | Collected from http://tamilconcordance.in/

அன்புடையீர், சங்க இலக்கியத்தில் சொற்களைத் தேடுவதற்காக ஏறக்குறைய 15 ஆண்டுகட்கு முன்னர் நான் எழுதிய ஒரு C Program-ஐப் பலரும் பயன்படுத்தும் வகையில் செய்தால் என்ன என்று தோன்றியது. அதற்காக ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன். இதில் 20 கோப்புகள் உள்ளன. 18 கோப்புகள் 10+8 சங்க இலக்கியங்களுக்கு. ஒரு கோப்பு தேடல் Program-இன் exe கோப்பு. கிடைக்கும் முடிவுகள் TSCTimes என்ற எழுத்துரு (Font)- இல் வரும். அதனைப்படிக்க இந்த எழுத்துருவும் இதில் உள்ளது. முதலில் இந்த எழுத்துருவை உங்கள் கணினியில் ஏற்றிக்கொள்ளவேண்டும் (அது ஏற்கனவே உங்களிடம் இல்லாவிட்டால்). இந்தக் கோப்புகளை உங்கள் கணினியில் ஒரு பொருத்தமான பெயரில் ஒரு Folder உருவாக்கி அதற்குள் சேமித்துக்கொள்ளவேண்டும். பின்னர் இருக்கும் ஒரே ஒரு exe file க்கு உங்கள் கணினியின் திரையில் ஒரு shortcut உருவாக்கிக்கொள்ளுங்கள். பின்பு அதனைச் சொடுக்கினால் உங்கள் தேடல் ஆரம்பிக்கும். உள்ளீடு (input) ஆங்கிலத்தில் இருக்கும். எளிமையான transliteration table துணை செய்யும். கொஞ்ச நாளைக்கு, அது நன்றாகப் பழகும்வரை கொஞ்சம் மெதுவாகச் செயல்படவேண்டும். கிடைக்கும் முடிவை txt file ஆக சேமித்துக்கொள்ளுங்கள். அது அந்த folder-இலேயே சேமிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவித்தால் அனுப்பிவைக்கிறேன். இங்கே அந்தக் கோப்புகளைப் பதிவேற்றம் செய்ய வழியில்லை. நன்றி, ப.பாண்டியராஜா